/அகச்சான்று

அகச்சான்று

மூல வேதம் தமிழே என்பதற்கு அகச்சான்று

பரஞ்சோதியார் திருவிளையாடல் புராணம்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ  பிரிந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ

இறையனார் களவியல்

தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில் நிறுவியவர்  சிவனே என்று நக்கீரர் வரைந்த இறையனார் களவியல் உரையில் காணலாம்.

இதனாலேயே உரிய மரியாதையை தமிழ்ச் சங்கப்புலவர்க்கு இறைவன் நின்று அளித்தான் என்று நம்பி திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

நம்பி திருவிளையாடல் புராணம்

மூவர்கட் கரியான் நிற்க
முத்தமிழ்த் தெய்வச் சங்கப்
பாவலர் வீற்றிருக்கும்
பாண்டி நன்னாடு போற்றி

திருமந்திரம்

வேதங்கள் முதலில் தமிழில் தான் இருந்தன என்பதற்குத் திருமந்திரம் (6000 ஆண்டுகளுக்கு முந்தையது) சான்று   பகர்கின்றது.

சதாசிவ தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனியாதிருந்தேன் நின்ற காலம்
இதாசனியா திருந்தேன் மனநீங்கி
உதாசனியா துடனே உணர்ந்தேனே

சேக்கிழார்

புதிய செந்தமிழ்ப் பழமறை: ஆதியிலே தமிழில் வேதம் இருந்தது.   இடையில் மறைந்தது.  பின்னர் திருஞானசம்பந்தர் புதிய வடிவில் பாடியருளினார் என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

பதிக நாண்மலர் கொண்டுதம் பிரான்கழல் பரவி
அதிக நான்பினை நீல நக்கருக்களித் தருளி
எதிர் கொளும் பதிதனில் எழுந்தருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்த பூசுரனார்.

மாணிக்கவாசகர்

இதையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்

பண்பிய நான்மறையும்  பாலனுகா மாலயனும்
கண்டாரும் இல்லைக் கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளும் கோகழி எங்கோ மாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மாறுரை      – என்கிறார்

நச்சினார்க்கினியர்

நான்மறை பற்றி புலவர்கள் உச்சிமேற்கொள்ளும் நச்சினார்க்கினியர் பரத்துவாஜ கோத்திர சுமார்த்தப் பிராமணர் தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்திற்கு உரை வரைந்தபோது, தொல்காப்பியம் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக் களத்தில் அரங்கேறியது (6,500 ஆண்டுகளுக்கு முன்) அரங்கேற்றம் அதங்கோட்டாசான் என்னும் மூதறிஞர் தலைமையில் நடந்தது.  அவர் நான் மறையில் வல்லவர் என்று சிறப்புப் பாயிர வரிகள் கூறுகின்றன.  இதோ அவை

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கரை நாமுன் நான்மறை முற்றிய

அதங் கோட்டாசாற் கரில்தபத் தெரிந்து

நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறை என்றார்.