- வேதம் – தமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம் ஆகும்.
- இறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை, வேதம் என்று கூறப்பட்டன.
- ‘வேதமொடு ஆகமம் இறைவன் நூல்‘ என திருமந்திரம் பகர்கிறது.
- தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில் நிறுவியவர் சிவனே என்று நக்கீரர் வரைந்த இறையனார் களவியல் உரையில் காணலாம்.
- வேதங்கள் முதலில் தமிழில் தான் இருந்தன என்பதற்குத் திருமந்திரம் (6000 ஆண்டுகளுக்கு முந்தையது) சான்று பகர்கின்றது.
- ஆரியவேதம் சுயம்பு – தமிழ் வேதம் இறையருளியது.
- வடமொழிக்கு மாறியது எப்படி ?
- வேதம் – உலகியல் அறிவு நூல். ஆகமம் – நிலையியல் இறை இன்ப நூல்
- ஆரியவேதம் சுயம்பு (தான்தோன்றி) – தமிழ் வேதம் இறையருளியது.
தமிழ் வேதத்திற்கு மாற்றான வடமொழி வேதம்:
வடமொழி நிகண்டு ‘அமரகோசம் ‘வேதம் த்ரயே‘ (மூன்று) என்கிறது. மனுஸ்மிருதியும் பல இடங்களில் 3 என கூறுகிறது. பிற்காலத்தில் அதர்வணத்தை சேர்த்து நான்காக்கியவர் வேதவியாசர்.