/தமிழ் வேதம் இறையருளியது

தமிழ் வேதம் இறையருளியது

தான்தோன்றி அர்சனை பாட்டே ஆகும்.  ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுகென்றார் தூமறைபாடும் வரியான பெரியபுராணம்.

புறநானூற்றில்,

நன்றாய்ந்த நீணிமிர் சடை
முழுமுதல் வன்வாய் போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணந்ந்த ஒருமுது நூல்             – 166

திருஞானசம்பந்தக் குழந்தை திருச் சேய்ஞலூரில் (குழந்தை தொடர்பான தலம்) இறைவனிடம் வினவுகிறார்.

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நிழல் மேவி அருமறை சொன்னதென்னே?
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

இதற்கு விடையாக திருமுதுகுன்றத்தில் பழமலைநாதர் (வயதான பெரியவர்) சொன்னதாக பாடுகின்றார்.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சுழிந்தச் சென்னிச் சைவ வேடம் தான் நினைந்தைம் புலனும்
அழிந்த சிந்தை அந்தணளார்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

இதையே அப்பர்  ‘ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம்,
வீடு ஆறங்கம் வேதம் தெரித்தானை’
என்று பாடுகிறார்.

இதையே சுந்தரர் ‘அருந்தவமா முனிவர்க்(கு) அருளாகி ஓர் ஆலதன்கீழ்
இருந்து அறமே புரிதற்கு இயல்வாகியது என்னை கொலாம்’ என்று பாடுகிறார்.

இதையே மணிவாசகர் ‘அருந்தவர்க்கு ஆலின்கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவர்க்கு அருளுமது எனக்கறிய இயம்போநீ’ என்று பாடுகிறார்.

இதையே மேலும் திருமூலர்

‘சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்றவ் வுற்பத்தி
அத்தன் எனக்கிங்(கு) அருளால் அளித்ததே’ என்று பாடுகிறார்.

இதையே சேக்கிழார் 12ஆம் திருமுறையாகிய பெரிய புராணத்தில் திங்கள் அணி மணிமாடம் .. என்ற பாடலில் பாடுகிறார்.  திருத்தோணி மிசை மேவினார் தங்கள் திரு முன்பு தாழ்ந்தெழுந்து நின்று தமிழ் வேதத்தைப் பாடியே சம்பந்தர் தங்கத் தாளம் பெற்றார் என சேக்கிழார் கூறுகிறார்.