/வேதம் என்றால் என்ன ?

வேதம் என்றால் என்ன ?

 

வேதம் என்றால் என்ன ?

வேதம் என்பது நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு. இதுவே நான்மறை ஆகும்.

வேதம் என்பது தூய தமிழ் சொல். வே+த்+அம்

வேய்தல், வேலி, மறைப்பு என்ற பொருளில் உலக உயிர்களுக்கு அரண் அமைத்து, அவைகள் நடைமுறையில், வாழ்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ வேண்டும், பொருள் ஈட்ட வேண்டும், இறைவனை அடைய வேண்டும் என்று உலக உயிர்களுக்கு மறை பொருளில் மறையாக இறைவன் அருளியதே நான்மறை ஆகும்.

நமது அனைத்து தமிழ் இலக்கியத்திலும், தெய்வத்தமிழ் நூல்களிலும் குறிக்கப்படும் நான்மறை என்ற சொல்லின் பொருள் இதுவே ஆகும்.

எனவே நான்மறை ஆவன – 1. அறத்தமிழ் வேதம், 2. பொருட்டமிழ் வேதம், 3. இன்பத்தமிழ் வேதம், 4. வீட்டியல் வேதம் முறையே, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நமது வேதங்கள் ஆகும்.

நமது இந்த நான்கு வேதங்களை பற்றி எம்பெருமான் மாணிக்கவாசகரும்

அரும் தவருக்கு ஆலின்கீழ் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் இருந்தவருக்கு அருளியதுபோல் எனக்கு அறிய இயம்பே”மற்றும்

வேதமாம் நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழ்யிருந்து அறம்  பொருள் இன்பம் வீடுரைத்தான் காணேஎன்று பாடி அருளினார்

நம்பெருமான் ஞானசம்பந்தரும் – அறம் பொருள் இன்பம் வீடு என்ற செந்தமிழ் நான்மறை தொழுதேத்தும் தில்லை என தமிழ் மந்திரங்கள் முழங்கின, தமிழ் வழிபாடு  நடந்தது என்று தில்லை சிதம்பரத்தில் சான்று (Evidence) பகிர்கின்றார்

தொல்காப்பியரும்

அந் நிலை மருங்கின் அறம், பொருள், இன்பம், வீடு முதல் ஆகிய முதல் பொருட்கும் உரிய என்ப  என்று  இதுதான் முதற் பொருள் எனக் கூறுகிறார்.

இது மாதிரி ஏராளமான நூல்களில் நமது வேதங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு வேதங்களும் நமக்கு முறையாக தொகுக்க பட்டு செம்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.