ஆகமங்கள் (Agamas) ஆதி தமிழர் கோயில்களில் வழிபாட்டு முறைக்காக தமிழில் தமிழர்களால் எழுதப்பட்ட ஒன்று.
ஆகமம் என்ற பொருள்:
ஆகமம் (ஆ+ காமம்) என்பது தூய தமிழ் சொல். ஆ என்பது உயிர்களை குறிக்கிறது. எனவே உயிர்கள் கடை சேருவதற்காக அருளப்பட்டது.
“‘நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே” என்று நம்பிரான் திருமூலர் 9 ஆகமங்களை அருளினார்.
இந்த ஆகமங்களை பல்லவர் காலத்தில் அவர்களது சமஸ்கிருத மொழிக்கு (Sankrit) கிரந்த எழுத்து முறையை (Grantha lipi) நமது தமிழ் சிவச்சாரியார்கள் உருவாக்கி வழங்கினார்கள். இதுவே சமஸ்கிருதத்திற்கு (Sanskrit) கிடைத்த முதல் எழுத்து முறை ஆகும். அதுவரை பேச்சு வழக்காக இருந்தது.
இந்த கிரந்த லிபியே பல்லவ கிரந்தம் என்றும் பெயர் பெறும். இந்த கிரந்த எழுத்து முறையில் பல்லவ காலத்தில் தமிழிலுள்ள நமது ஆகமங்களை அவர்கள் படிப்பதற்கு வசதியாக கிரந்த எழுத்தில் இடைசெருகளுடன் அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி வைத்தார்கள்.
எனவே இவ் ஆகமங்கள் நமது பூர்வகுடி சொத்தாகும். இதை தான் நம்பிரான் திருமூலர்.
“’நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே”
செந்தமிழ் சிந்தை செய்து ஆகமம் செப்ப லுற்றேனே” என்று பாடி அருளினார்.
மேலும் அதை தெய்வதமிழில் தான் அருளினேன் என்பதற்கு
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்றும், வழி வழியாக வந்த ஆகமங்களை இறைவன் கூற நமக்கு அருளினார் என்று அவரே கூறுகிறார்.
எனவே இங்கு இறைவன் ஆகமங்களை தமிழில் தான் கூறினான் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக நம்பினார் திருமூலர் கூறுகிறார்.
எனவே இவ் ஆகம முறைப்படியே நமது கோயில்களில் சங்க காலத்தில் தெய்வத்தமிழ் மந்திரங்கள் ஓத இயல், இசை, நாடக வழிபாட்டினை செய்தனர்.
அதாவது மலர் சூடி, தெய்வத்தமிழ் மந்திரம் ஓதி பண்ணிசை இசைத்து இறைவன் முன் நாட்டியமாடி, அவன் புகழை கூறி தின வழிபாடு செய்தனர்.
இவை தஞ்சை பெரிய கோயிலில் (Tanjore Big Temple) கல்வெட்டில் அற்புதமாக கூறப்பட்டுள்ளன.
இதையே எம்பிரான் ஞானசம்பந்தர் பெருமானும் (“செந்தமிழ் மந்திரம் ஓதும் தில்லை”) என்று தற்போதைய சிதம்பரம் தில்லை கோயிலில் (Chidambaram Natarajar Temple) தெய்வத்தமிழ் மந்திரம் ஓதி வழிபாடு நடந்ததை கூறுகிறார்.
அப்பர் பெருமானும் இறைவனை கோவில்களில் வழிபாடு செய்ய – “தமிழோடு இசை பாட மறந்தறியேன்” என்று தமிழில் வழிபாடு நடந்ததை கூறுகிறார்.
இதை தற்போது நீதிபதி மகாராசன் (Justice Maharajan) தலைமையில் அமைந்த குழுவும் கி.பி. AD 1315 வரை எல்லா கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடந்ததை கூறுகின்றார்.
எனவே, ஆகம முறைப்படி தற்போது கோயில் வழிபாடுகளை தெய்வத்தமிழ் மந்திரம் கூறி வழிபடலாம் என்பதை உச்சநீதிமன்றமும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகாமமும் தமிழும் – Archakar Case Judegment.