/தமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது

தமிழ் வேதம் எப்பொழுது மாற்றம் கண்டது

இராஜஇராஜ சோழன் காலத்திலேயே திருமுறைகள் தில்லையில் வைத்து பூட்டப்பட்டன.  7ஆம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் வழிபாடும் கோயில் மூலவர்களுக்குத் தமிழ்ப் பெயர்களே விளங்கியது என பல கல்வெட்டுச் செய்திகள் உண்டு.  இராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பி துணைக்கொண்டு பெருமுயற்சியில் திருமுறைகள் மீண்டும் புத்துயிர்  அளிக்கப் பெற்றுச் சில காலம் நிலவி வந்துள்ளது.   பின்னர் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 3ஆம் குலோத்துங்கன் ஆட்சியில் குகையிடிக்கலகத்தில் கோயில்களில்  உள்ள பல தமிழ் கல் வெட்டுக்கள் அழிக்கப்பட்டு விட்டன.   இவை சைவ மடங்களுக்கு எதிராக நடத்தப் பெற்றது.  A.R for 1913 para 42 மற்றும் A.R for 1926-27  para 84 என்ற கல்வெட்டுப் பதிவுகளில் குகையிடிக்கலகம் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

Kugaiyidi Kalagam which happened in the 22nd year of Periya Devar (Kulothungan III) must have been instigated by the Brahmanas against the non-Brahmanical Saiva-maths.

திருமுறைத் துதி:

ஏடங்கை நங்கை இறையெங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை
பாடுந் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே